தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 171 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை மொத்தம் 2,769 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 171 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்க 2,940 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் கரோனா தொற்று 3000 - ஐ நெருங்கியுள்ளது. நாளை 3000- ஐ கடந்துவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த காவல் நிலையம் மூடப்பட்டது.