தமிழகம்

நெல்லை மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கரோனா: சுத்தமல்லி, முக்கூடல் காவல் நிலையங்கள் மூடல்

அ.அருள்தாசன்

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று புதிதாக 131 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

சுத்தமல்லி, முக்கூடலில் போலீஸாருக்கு நோய் தொற்று உறுதியானதை அடுத்து இங்குள்ள போலீஸ் நிலையங்கள் மூடப்பட்டன.

திருநெல்வேலி மாநகரில் 47, அம்பாசமுத்திரத்தில் 9, சேரன்மகாதேவியில் 9, களக்காட்டில் 5, மானூரில் 5, நாங்குநேரியில் 2, பாளையங்கோட்டை தாலுகாவில் 19, பாப்பாக்குடியில் 9, ராதாபுரத்தில் 15, வள்ளியூரில் 11 என்று 131 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

மேலும், சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் 2 போலீஸாருக்கும், முக்கூடல் போலீஸ் நிலையத்தில் ஒரு போலீஸ்காரருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து இந்த போலீஸ் நிலையங்கள் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

SCROLL FOR NEXT