தமிழகம்

பிளஸ்-2 தேர்வில் மதுரை மாநகராட்சிப் பள்ளிகள் 92.78% தேர்ச்சி: கடந்த ஆண்டைவிடக் குறைவு  

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.78 சதவீதம் தேர்ச்சிப்பெற்றுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

மதுரையில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் 15 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 402 மாணவர்களும், 1661 மாணவிகளும் இந்த ஆண்டு ப்ளஸ்-2 தேர்வு எழுதினர்.

இவர்களில் 351 மாணவர்களும், 1563 மாணவிகளும் தேர்ச்சிப்பெற்றனர். இதன் மூலம் மாநகராட்சிப் பள்ளிகள், 92.78 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. சென்ற ஆண்டு மாநகராட்சிப் பள்ளிகள் ப்ளஸ்-டூ தேர்வில் 96.68 சதவீதம் தேர்ச்சிப்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மொத்தமுள்ள 15 பள்ளிகளில் 11 பள்ளிகள் 90 சதவீத்திற்கும் மேல் தேர்ச்சிப்பெற்றனர். நாவலர் சோமசுந்திர பாரதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மட்டும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

அடுத்ததாக கஸ்தூரி பாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.19 சதவீதமும், வெள்ளி வீதியாகர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97.92 சதவீதமும் தேர்ச்சிப்பெற்றுள்ளனர்.

தத்தனேரி தி.வி.க.மாநகராட்சி இருபாலர் பள்ளி 96.75 சதவீதமும், சேதுபதி பாண்டித்துரை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 06.30 சதவீதமும், மஞ்சணக்கார வீதி மாசாத்தியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 96 சதவீதமும், கோரிப்பாளையம் பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 95.65 சதவீதமும், சுந்தராஜபுரம் மாநகராட்சி இரு பாலர் மேல்நிலைப்பள்ளி 95.35 சதவீதமும், ஈவேரா நாகமையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 92.77 சதவீதமும், அவ்வை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 92 சதவீதமும் தேர்ச்சிப்பெற்றுள்ளது.

மாணவ, மாணவிகள், ஆசிரியர்களை மாநகராடசி ஆணையாளர் விசாகன் பாராட்டினார்.

SCROLL FOR NEXT