தமிழகம்

வாஞ்சிநாதன் பிறந்தநாள் விழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை: தென்காசி ஆட்சியர்

த.அசோக் குமார்

வாஞ்சிநாதன் பிறந்தநாள் விழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனமதி இல்லை என தென்காசி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் பிறந்தநாள் விழாவான ஜூலை 17-ம் தேதி அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்டுகிறது.

அதன்படி, செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அமைச்சர் மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் அதிகமாகக் கூடாத வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வாஞ்சிநாதன் பிறந்தநாள் விழாவையொட்டி செங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நடைபெறும் விழாவில் பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை.

இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT