தமிழகம்

மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் உதயகுமார் நியமனம்: நிர்வாகிகளும் அறிவிப்பு 

செய்திப்பிரிவு

மதுரை புறநகர் மேற்கு புறநகர் மாவட்ட செயலாளராக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவில் மாவட்ட வாரியாக மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் நியமனம் தொடங்கியுள்ளது. மதுரை புறநகர் மேற்கு புறநகர் மாவட்ட செயலாளராக வருவாய்துறை அமைச்சரும், மாநில ஜெ., பேரவை செலாளருமான ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்ட அவைத் தலைவராக பி.அய்யப்பன், மாவட்ட இணைச் செயலாளராக பஞ்சவர்ணம், துணைச் செயலாளர்களாக பஞ்சம்மாள், கி.மாணிக்கம், மாவட்ட பொருளாராக கே.திருப்பதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோல் புறநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக டி.ஆர்.பால்பாண்டி, மாவட்ட ஜெ., பேரவை செயலாளராக ஐ.தமிழழகன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக காசிமாயன், மாவட்ட மகளிர் அணி செயலாளராக பி.லெட்சுமி, மாவட்ட மாணவர் அணி செயலாளராக பி.மகேந்திரபாண்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதுபோல் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளராக எஸ்பிஎஸ்.ராஜா, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளராக ஏ.தமிழ்செல்வம், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளராக ஜஹாங்கீர், விவசாயப்பிரிவு மாவட்ட செயலாளராக பி.வேலுச்சாமி, மீனவர் பிரிவு மாவட்ட செயலாளராக பி.சரவணன், மருத்துவ அணி மாவட்ட செயலாளராக டாக்டர் சந்திரன், இலக்கிய அணி மாவட்ட செயலாளராக எம்.போத்திராஜன், அமைப்பு சாரா ஒட்டுனர் அணி மாவட்ட செயலாளராக எம்.ராமகிருஷ்ணன், இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளராக எம்.ஆர்யா, தகவல் தொழில்நுட்பம் பிரிவு மாவட்ட செயலாளராக ஜி.சிங்கராஜபாண்டியன், வர்த்தக அணி மாவட்ட செயலாளராக எம்.சதிஷ் சண்முகம், கலைப்பிரிவு மாவட்ட செயலாளராக ரஞ்சித்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை முதலமைச்சரும் அதிமுக துணை ஒருங்கிணப்பாளருமான கே.பழனிசாமி, துணை முதலமைச்சரும், ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT