கரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 15-ம்தேதி முதல் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்பட்டதால் சென்னை விசைப்படகு மீனவர்களால் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை.
இந்நிலையில், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 115 நாட்களுக்கு பிறகு விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அமைச்சர் ஜெயக்குமார் மலர்களைத் தூவிஇந்த படகுகளை வழியனுப்பி வைத்தார்.