சேலம் கந்தம்பட்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். உடன் திமுக எம்.பி. பார்த்திபன், எம்எல்ஏக்கள் செம்மலை, சக்திவேல், வெங்கடாஜலம், ஆட்சியர் ராமன் உள்ளிட்டோர்.படம்: எஸ்.குரு பிரசாத் 
தமிழகம்

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் விவசாயிகளுக்கு கடனை நிறுத்தவில்லை: தவறான தகவல் பரப்பப்படுவதாக முதல்வர் பழனிசாமி விளக்கம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நகைக் கடன் உள்ளிட்ட எந்தக் கடனும் நிறுத்தப்படவில்லை என் றும், நிறுத்தப்பட்டதாக கூறுவது தவறான தகவல் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது.

இதைத் தொடர்ந்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், மக ளிர் சுயஉதவிக் குழுவினர் ஆகியோருடன் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கரோனா ஊரடங்கு காலகட்டத் தில் மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணி யாளர்கள் என 15 ஆயிரத் துக்கும் மேற்பட்டவர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் மூலம் ரூ.10 ஆயிரம் கோடி அளவில் உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மாநில அரசின் மூலம் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு கரோனா நிவாரணப் பணிகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. கரோனா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது மிகவும் அவசியம். ஆனாலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கரோனாவை குணப்படுத்த மருந்து கள் வழங்கப்படுகிறது.

10 நாளில் குறையும்

சென்னையில் நோய்ப் பரவல் குறைந்துள்ளது. அனைத்து பகுதி களிலும் படிப்படியாக நோய் பரவல் குறைந்து வருகிறது. இன்னும் 10 நாட்களில் கரோனாவை கட்டுக் குள் கொண்டுவர அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கி களில் நகைக்கடன் உள்ளிட்ட எந்த கடனும் நிறுத்தி வைக்கப் படவில்லை. அவ்வாறு கடன் வழங்குவது நிறுத்தப்பட்டதாக கூறுவது தவறான தகவல். வங்கி களில் வைப்புத்தொகை வைத் துள்ள விவசாயிகளுக்கு அதை திரும்ப அளிக்க வேண்டும் என் பதால், குறிப்பிட்ட நிதியை வைத் துக் கொண்டு கூட்டுறவு வங்கி அலுவலர்கள், தலைவர்கள் கடன் களை வழங்கலாம் என அறிவுறுத் தப்பட்டுள்ளது.

ஆன்-லைன் மூலம் நடத்தப்படும் கல்விக்கு கட்டண தளர்வு அளிப்பது தொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், பள்ளி நிர்வாகி களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். கோவை இரு கூரில் இருந்து கர்நாடகாவுக்கு பெட்ரோலிய குழாய்கள் பதிக்கப் படுவது குறித்து விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தால் விவசாயிகளுக்கோ, விவசாயத்துக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது.

இவ்வாறு முதல்வர் தெரி வித்தார்.

கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள தாகவும், இதனால் நகைக் கடன் உள்ளிட்ட கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் எந்தக் கடனும் நிறுத் தப்படவில்லை என்ற முதல்வரின் அறிவிப்பு விவசாயிகளி டையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காவிரி நீரை பெற நடவடிக்கை

கிருஷ்ணகிரி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சேலம் வந்த முதல்வர் பழனிசாமி, கந்தம் பட்டியில் நடந்த மேம்பாலம் திறப்பு விழாவில் பங்கேற்றார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கர்நாடகாவில் இருந்து தமிழகத் துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை, காவிரி ஒழுங்காற்று குழு மூலம் பெற்றிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.

மேட்டூர் உபரிநீர் திட்டங்கள் மூலம் ஒரு சொட்டு தண்ணீர்கூட வீணாக கடலில் கலந்துவிடாமல் விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்த ஏதுவாக அரசு திட்டம் வகுத்துள்ளது. உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

75 ஆயிரம் படுக்கைகள் தயார்

தமிழகத்தில் கரோனா தொற் றுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத் துவமனைகள், தனியார் கல்லூரி களில் 75 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. சேலம் மாவட்டத்தில் 3 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக சேலம் கந்தம்பட்டி யில் காஷ்மீர் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலம் மற்றும் பேளூர் கிளாக்காடு பகுதியில் கட்டப்பட்ட மேம்பாலம் உள்ளிட்ட ரூ.39.43 கோடி மதிப்பிலான புதிய மேம்பாலங்கள் மற்றும் ரூ.76.91 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட திட்டப் பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர், திமுக எம்.பி. பார்த் திபன், எம்எல்ஏக்கள் செம்மலை, வெங்கடாசலம், சக்திவேல், மனோன்மணி, மாவட்ட ஆட்சி யர் ராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT