திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில் ஊழியர் ஒருவருக்கு நோய் தொற்று உறுதியானதை அடுத்து பாளையங்கோட்டையிலுள்ள தலைமை தபால் நிலையம் 2 நாட்களுக்கு மூடப்பட்டது.
திருநெல்வேலி மாநகரில் 82, அம்பாசமுத்திரத்தில் 13, சேரன்மகாதேவியில் 15, களக்காட்டில் 4, மானூரில் 6, நாங்குநேரியில் 11, பாளைங்கோட்டை தாலுகா பகுதிகளில் 28, பாப்பாக்குடியில் 10, ராதாபுரத்தில் 2, வள்ளியூரில் 10 என்று நேற்று ஒரே நாளில் புதியதாக 181 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாளையங்கோட்டையில் செயல்படும் திருநெல்வேலி மாவட்ட தலைமை தபால் நிலைய ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து 2 நாட்களுக்கு தபால் நிலையம் மூடப்பட்டது.
இதுபோல் திருநெல்வேலி ஸ்ரீபுரத்திலுள்ள தபால் நிலையத்தில் சேமிப்பு பிரிவில் ஊழியர் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அந்த தபால் நிலையமும் மூடப்பட்டது.
இது குறித்த அறிவிப்பு அலுவலக வாசலில் வைக்கப்பட்டுள்ளது.