தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில் ரூ.48.59 லட்சத்தில் நீர்வடிப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்

இ.மணிகண்டன்

நபார்டு வங்கியின் 39-வது நிறுவன தினவிழாவையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் ரூ.48.59 லட்சத்தில் நீர்வடிப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நபார்டு வங்கியின் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குட வட்டங்களில் புளியம்பட்டி, பிள்ளையார் தொட்டியாங்குளம், எழுவணி, வேளானூரணி ஆகிய பகுதிகளில் புதிதாத நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் 4 ஆயிரம் ஹெக்டேரில் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை நபார்டு வங்கியின் தமிழக மண்டலத் தலைமை பொதுமேலாளர் எஸ்.செல்வராஜ் தொடங்கிவைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் 430 ஹெக்டேரில் குழியுடன் கூடிய மண்கரை வரப்பு, பண்ணைக் குட்டைகள் அமைத்தல், முற்செடிகளை அகற்றி அந்நிலத்தை விளைநிலமாக்குதல், விவசாயிகளுக்கு பழ மரக்கன்றுகள், வனமரக்கன்றுகள் வழங்குதல் போன்ற பணிகளுக்காக ரூ.48.59 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்ட தொடக்க நிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் விருதுநகர் மாவட்ட வளர்ச்சிப் பிரிவு மேலாளர் ராஜராஜேஸ்வரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சண்முகவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT