மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம் 
தமிழகம்

மின்கட்டண உயர்வு குறித்து ஆலோசனை: நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் கூட்டம்; ஸ்டாலின் அறிவிப்பு

செய்திப்பிரிவு

திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை, ஜூலை 16 அன்று நடைபெறும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15) வெளியிட்ட அறிவிப்பு:

"திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 16 (நாளை), வியாழக்கிழமை காலை 10.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

அப்போது மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் மின் கட்டண உயர்வு குறித்து ஆலோசிக்கப்படும் என, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT