தமிழகத்தில் கரோனாவை கட்டுப் படுத்தும் பணிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் கரோனா நோயில் இருந்து பொதுமக்களைப் பாது காக்கும் வகையில் இதர இணை நோய்கள் உள்ளவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் இந்த வாரம் முழுவதும் நடைபெற உள்ளது. எண்ணூரில் நேற்று நடந்த இணை பரிசோதனை முகாமை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவொற்றியூர் மண்டல த்தில் சர்க்கரை, ரத்த அழுத்தம், யூரியா, இதய நோய், ஆக்சிஜன் செரிவு, கருப்பை மற்றும் வாய்ப் புற்றுநோய் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வரு கின்றன. இதுவரை 15,724 பேர் இணை நோயாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர். இணை நோயாளிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் கோரிக்கையை ஏற்று பல நிலைகளில் மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது.
ஆனால், அந்த நிதி போதுமானதாக இல்லை. தேவைகள் அதிகமாக உள்ளதால், போதிய அளவு நிதி ஒதுக்க முதல்வர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். கோரிக்கை நிறைவேறும் பட்சத்தில் மேலும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.