தமிழகம்

தூத்துக்குடியில் கரோனாவுக்கு ஒரே நாளில் 4 பேர் பலி 

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட 112 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை 2,385 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், போக்குவரத்து காவல் ஆய்வாளர் உள்ளிட்ட மேலும் 112 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,497 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்று ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி டூவிபுரத்தை சேர்ந்த 81 வயது முதியவர்கள், சிவகாசியை சேர்ந்த 55 வயது ஆண் மற்றும் காயல்பட்டினத்தை சேர்ந்த 58 வயது ஆண், கோவில்பட்டியை சேர்ந்த 65 வயது பெண் ஆகிய 4 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT