ஆண்டுதோறும் ஜூலை 14-ம் தேதி பிரெஞ்சு தேசிய தினம் அந்நாட்டு தூதரகங்களில் கொண்டாடப்படுவது வழக்கம்.
கரோனா முன் தடுப்பாக நடப்பாண்டு பிரெஞ்சு தேசிய தினத்தை டிஜிட்டல் பிரெஞ்சு தேசிய தினமாக நடத்த முடிவு எடுத்துள்ளனர்.
அதன்படி இன்று(ஜூலை 14) பிரான்ஸ் தூதரகத்திலிருந்து ஆன்லைன் நிகழ்வுகளும், புதுச்சேரி மற்றும் சென்னையில் உள்ள பிரான்ஸ் துணை தூதரக நிகழ்வுகள் அந்தந்த பேஸ்புக் பக்கங்களிலும் பதிவிடப்படும். இன்று காலை 8.30 மணிக்கு புதுச்சேரி பிரெஞ்சு போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைக்கப்படும். தொடர்ந்து, மாலை 6 மணி வரை நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளை புதுச்சேரி, சென்னை பிரான்ஸ் துணை தூதரக பேஸ்புக் பக்கங்களில் காணலாம்.