செய்யூர் அருகே பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
செய்யூர் அருகே உள்ள நயினார்குப்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகள் சசிகலா(29). இவர் கடந்த 24-ம் தேதி மர்மமானமுறையில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாகஅப்பெண்ணின் உறவினர்களான அப்பகுதி திமுக இளைஞரணி துணைச் செயலர் தேவேந்திரன், அவரது அண்ணன் புருஷோத்தமன் ஆகியோர் மீது புகார் கூறப்பட்டது. ஏற்கெனவே புருஷோத்தமன் கைது செய்யப்பட்ட நிலையில் தேவேந்திரன் தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில் பாலியல் வன்முறை விவகாரங்களில் செய்யூர் காவல் துறை மெத்தனமாக செயல்படுவதாகக் கூறி, நேற்று ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து வியாசர்பாடியில் இருந்த திமுக இளைஞரணி நிர்வாகி தேவேந்திரனை போலீஸார் நேற்று கைது செய்தனர்.