மதுவிலக்கு கோரியும் மத்திய அரசைக் கண்டித்தும் தமிழக மகிளா காங்கிரஸ் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி விஜயதரணி நிருபர்களிடம் கூறியதாவது:
விலைவாசி உயர்வு, மகளிர் சுய உதவிக் குழுக்களை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட் டிருப்பதைக் கண்டித்தும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரியும், ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
பொதுமக்கள் அன்றாடம் பயன் படுத்தும் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.55-க்கு விற்கப்படுவதாக அரசு கூறுகிறது. அக்கடைகள் எங்கிருக் கின்றன என்றே தெரியவில்லை.
மகளிர் சுய உதவிக் குழுக் களை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அக்குழுக் களுக்கு ரூ.18 ஆயிரம் கோடி கொடுக்கப்பட்டிருப்பதாக முதல் வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அத்தொகை மகளிர் குழுக்களை சென்றடையவில்லை. தற்போது ரூ.6 ஆயிரம் கோடி கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். மது விற்பனையால் பல பெண்கள் விதவையாகியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்சியின் துணைத் தலைவர் எச்.வசந்தகுமார், பொதுச்செயலர் எம்.ஜோதி, முன்னாள் எம்எல்ஏ யசோதா உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.