மதுரை மாவட்டக் காவல் கண் காணிப்பாளராகப் பணிபுரிந்த நெ.மணிவண்ணன் நெல்லை எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக கோவை எஸ்.பி.யாக இருந்த சுஜித்குமார், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப் பாளராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, குற்றச்செயல் களைத் தடுக்க முன்னுரிமை தரப்படும் என்றார்.
பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், 2013-ல் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, மதுரையில் 6 மாதங்கள் பயிற்சியில் இருந்துள்ளார். சேலத்தில் உதவி எஸ்.பி., கோவையில் துணை ஆணையர், அதன்பின் எஸ்.பி.யாகப் பணிபுரிந்துள்ளார்.
துணை ஆணையர்
மதுரை மாநகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராகப் பணிபுரிந்த கார்த்திக், சென்னைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக விருதுநகரில் உதவி எஸ்.பி.யாக இருந்த ஆர்.சிவபிரசாத், பதவி உயர்வு பெற்று மதுரை மாநகர துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றார். பெங்களூருவைச் சேர்ந்த இவர், பொறியியல் பட்டதாரி. 2016-ல் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்.