கிருஷ்ணகிரி மாவட்டம் ஏக்கல்நத்தம் மலைக்கிராமத்துக்கு சாலை அமைக்கும் பணியை வேப்பனப்பள்ளி எம்எல்ஏ முருகன் பார்வையிட்டார். 
தமிழகம்

ஏக்கல்நத்தம் மலைக்கிராமத்துக்கு சாலை

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட நாரலப்பள்ளி ஊராட்சி ஏக்கல்நத்தம் மலைக் கிராமத்தில் 190 குடியிருப்புகள் உள்ளன.

தரைமட்டத்தில் உள்ள சின்னசக்னாவூரில் இருந்து ஏக்கல்நத்தம் கிராமத்துக்குச் செல்ல 4 கி.மீ., தொலைவிற்கு சாலை வசதி இல்லை. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்கவும், மருத்துவமனைக்கு செல்லவும், தினமும் வேலைக்கு சென்று வரவும் மக்கள் மலைப்பாதையில் நடந்தே சென்று வருகின்றனர். இங்கு சாலை அமைத்துத்தர வேண்டும் என கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து, சாலை அமைக்க தமிழக அரசு ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. மலைக்கிராமத்துக்கு சாலை அமைக்கும் பணிகளை வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை உறுப்பினர் முருகன் பார்வையிட்டார்.

SCROLL FOR NEXT