தமிழகம்

மேட்டூரில் மின் உற்பத்தி குறைப்பு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், மின் தேவை குறைந்துள்ளது. எனவே, மேட்டூர் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூரில் உள்ள முதல் பிரிவு அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட 4 அலகுகளும், 2-வது பிரிவில் 600 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட ஒரு அலகும் உள்ளது.

தற்போது, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் மின் தேவை குறைந்துள்ளது. இதனால், மேட்டூர் அனல் மின் நிலைய முதல் பிரிவில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் 4-வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. நேற்று 3-வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

ஏற்கெனவே பராமரிப்பு காரணங்களுக்காக 2-வது அலகின் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், தற்போது, 840 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT