கடந்த ஜூலை 1-ம் தேதி நெய்வேலி என்எல்சி 2-வது அனல்மின் நிலையத்தின் 5-வது அலகில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டது.
இதில், அந்த இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்து சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 17 பேரில் சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் 7 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலை யில், சென்னையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சீப் டெக்னீஷியன் சுரேஷ்(50) என்பவர் நேற்று உயிரிழந்தார். இவரையும் சேர்ந்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.