செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 250 படுக்கைகள் வசதி கொண்ட கரோனா வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், 350 பேர் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இம்மருத்துவமனையில் இதுவரை 11 மருத்துவர்கள், 11 செவிலியர்கள், 4 பணியாளர்கள் என மொத்தம் 26 பேருக்கு வைரஸ் தொற்றுஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் சிகிச்சைஅளிக்கப்பட்டு, 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அடுத்தடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள் கரோனாவால் பாதிக்கப்படுவதால் அவர்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகி ஒருவர் கூறும்போது, “பணியில் இருக்கும்போது மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தொற்று ஏற்படுகிறது. இதனால் அவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள்இவ்விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி காலிப் பணியிடங்களை நிரப்புவதோடு, மருத்துவ உபகரணங்கள் தங்குதடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.