எஸ்.அரவிந்த் 
தமிழகம்

தி.மலை மாவட்ட புதிய எஸ்பி பொறுப்பேற்பு

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.அரவிந்த் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப் பாளராக பணியாற்றி வந்த எம்.ஆர்.சிபி சக்ரவர்த்தி, சென்னை நிர்வாகப் பிரிவு உதவி ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார். சென்னை சிறப்பு நுண்ணறிவு (எஸ்பிசிஐடி) பிரிவு எஸ்பியாக பணியாற்றிய எஸ்.அரவிந்த், திருவண்ணாமலை மாவட்ட 24-வது காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர், திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

இவர், கடந்த 2006-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் கரூர், திருநெல்வேலி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சிபிசிஐடியில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். 2013-ல் பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி சைபர் பிரிவு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, நுண்ணறிவு சிறப்பு பிரிவுகளில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு மீண்டும் பதவி உயர்வு பெற்று, சென்னை நுண்ணறிவு சிறப்பு பிரிவில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

SCROLL FOR NEXT