மதுரையில் நேற்று ஒரே நாளில் 10 கரோனா நோயாளிகள் சிகிச்சை பலனளிக்காமல் உயிரி ழந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப் படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 5,353 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டிருந்தனர். நேற்று 533 நோயாளிகள் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.
அதேநேரத்தில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று ஒரே நாளில் 10 நோயாளிகள் உயிரி ழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று புதிதாக 277 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது