தமிழகம்

மாடம்பாக்கம் பேரூராட்சியில் ரூ.7 கோடி டெண்டர் முறைகேடு: தாம்பரம் எம்எல்ஏ புகார்

செய்திப்பிரிவு

மாடம்பாக்கம் பேரூராட்சியில் அண்மையில் விடப்பட்ட ரூ.7 கோடி டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செங்கல்பட்டு ஆட்சியர் ஜான் லூயிஸிடம் அவர் அளித்துள்ள புகார் விவரம் வருமாறு:

தாம்பரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மாடம்பாக்கம் பேரூராட்சியில் நிதி பற்றாக்குறையின் காரணமாக மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்ற இயலவில்லை. இந்நிலையில் கடந்த 2-ம் தேதி பேரூராட்சி பொது நிதியில் இருந்து ஒரேநாளில் விளம்பரம் செய்யப்பட்டு ரூ.7 கோடியே 4 லட்சம் மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தப் புள்ளியானது சரியான முறையில் விளம்பரம் செய்யப்படாமல் டெண்டர் ஷெட்யூல்கள் சரியாக வழங்கப்படாமல் நடைபெற்றது என ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே, ஒப்பந்தப் புள்ளிகளை ரத்துசெய்ய உரிய நடவடிக்கை எடுத்து, மீண்டும் உடனடியாக மறு ஒப்பந்தப்புள்ளி கோரவும் இதுபோன்ற தவறுகள் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT