தமிழகம்

சட்டப்பேரவை தேர்தலின்போது தே.ஜ. கூட்டணி மேலும் வலுவடையும்: தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் மேலும் சில கட்சிகள் இணைவதால் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவடையும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று காலை ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது 40 ஆசிரியர்களுக்கு விபத்துக் காப்பீடு திட்ட பாலிசியை தமிழிசை சவுந்தரராஜன் அளித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் மதுவிலக்கு அமலாகும் வரை பாஜக போரா டும். 2016-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முயற்சிகளை பாஜக மேற்கொள்ளும். தமிழகத் தில் எல்.இ.டி. விளக்குகளை பயன் பாட்டுக்கு கொண்டுவந்தால் ரூ.600 கோடியை மிச்சப்படுத்தலாம். தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்ற ரூ.300 கோடி ஒதுக்குவது, குளச்சல் துறைமுகத்துக்கு அனுமதி வழங் கியது போன்ற தமிழக அரசின் செயல்கள் பாராட்டுக்குரியவை. காவல் நிலைய மரணங்கள் தொடர்வது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் மொழியை வைத்து சில கட்சிகள் பிரச் சினை கிளப்புகின்றன. இந்தி, சமஸ்கிருதம் என்றாலே போராட் டம் நடத்துகிறார்கள். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையவுள்ளன. சட்டப்பேரவை தேர்தலில் எங்கள் கூட்டணி மேலும் வலுவடையும்.

இவ்வாறு தமிழிசை கூறினார்.

திமுகவில்தான் குழப்பம்

துறைமுக வளாகத்தில் நடந்த வ.உ.சிதம்பரனாரின் 144-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற தமிழிசை, நிருபர்களிடம் கூறும் போது, ‘‘திமுகவில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒரு கருத்தை தெரிவிக்கிறார். கட்சியின் தலைவர் கருணாநிதி அதை மறுக்கிறார். வெளியில் இருந்து சிலர் திமுகவுக்குள் குழப் பத்தை ஏற்படுத்துவதாக கருணா நிதி தெரிவித்துள்ளார். வெளியில் இருந்து யாரும் திமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண் டிய தில்லை. அக்கட்சி யினரால் தான் குழப்பம் ஏற் பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்று கிடையாது என்பதை மறுக் கிறேன். மாற்று சக்தி உருவாக வாய்ப்புள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT