தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக அரூரில் 49 மி.மீட்டர், ஒகேனக்கல்லில் 35 மி.மீட்டர் மழை பதிவானது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 2000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 2700 கன அடியாக அதிகரித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெனுகொண்டாபுரத்தில் 69.3 மிமீ மழை பதிவானது. பாரூர் – 46 மிமீ, போச்சம்பள்ளி - 38.2, ஓசூர் - 11 மி.மீட்டர் மழை பதிவாகியிருந்தது.