புதிய எஸ்.பி.சுஜித்குமார் 
தமிழகம்

மதுரை எஸ்.பி மணிவண்ணன் நெல்லைக்கு மாற்றம்: சிலப்பதிகார பூங்காவால் மதுரைக்கு கூடுதல் அடையாளம் சேர்த்தவர்- புதிய எஸ்.பி.,யாக சுஜித்குமார் நியமனம்

என்.சன்னாசி

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மணிவண்ணன் கடந்த 2017 மே மாதம் நியமிக்கப்பட்டார். ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றத்தின்போது, இவரும் இடமாற்றம் செய்யப்பட்டார். நெல்லை எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மதுரை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு பராமரித்தல், குற்றத்தடுப்பு நடவடிக்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினார்.

செல்போன் திருட்டுக்களை கண்டறிய சைபர் கிளப் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி, இதன்மூலம் ஏராளமான திருட்டு மற்றும் காணாமல் போன செல்போன்களை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

மேலும், சதுரகிரி மகாலிங்கம் கோயில் திருவிழா, சித்திரைத் திருவிழாவின் போது, கள்ளழகரை தரிசிக்க சிறப்பு செயலியை உருவாக்கி, முதியவர்கள் உள்ளிட்ட வெளியில் வரமுடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சாமியை தரிசிக்க ஏற்பாடு செய்தார்.

மதுரை காவல்துறை பற்றி தெரிந்து கொள்ள மதுரை காவலன், பூட்டிய வீடுகளில் திருட்டு, இரு சக்கர வாகனம் திருட்டு போன்ற குற்றச் செயல்களை தடுக்க, தொழில்நுட்ப ரீதியிலான ஆன்லைன் செயலிகளை ஏற்படுத்தி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.

ஜல்லிக்கட்டு, கள்ளழகர் திருவிழாக்களுக்கு சிறந்த பாதுகாப்பு மற்றும் நேரடி ஒளிபரப்பு ஏற்பாடுகளை செய்து பணியாற்றினார். இது போன்ற பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டாலும், மதுரையின் மற்றொரு அடையாளமாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரெ சிலப்பதிகாரப் பூங்காவை சிறப்பாக வடிவமைத்து திறந்தார்.

இதில் கண்ணகியை அடையாளப்படுத்தும் விதமாக காற்சிலம்பை ஒன்று ஏற்படுத்தி உள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிலப்பதிகாரம் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் சிலப்பதிகார பாடல்களும் சிறப்புகளும் பூங்காவில் இடம் பெறச் செய்துள்ளார்.

இதற்காக எஸ்.பி.,யை முதல்வரே பாராட்டியதாக சமீபத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவருக்கு புகழாரமும் சூட்டினார்.

இவருக்கு பதிலாக கோவை மாவட்ட எஸ்பி சுஜித்குமார் மதுரை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்ற மதுரை நகர் சட்டம், ஒழுங்கு துணை ஆணையராக சமீபத்தில் பொறுப்பேற்ற கார்த்திக் சென்னை பூக்கடை பஜார் துணை ஆணையராகவும், அவருக்கு பதிலாக விருதுநகரில் உதவி எஸ்.பி.,யாக இருந்த சிவப்பிரசாத்தும், மதுரை சிவில் சப்ளை சிஐடி எஸ்பி ஸ்டாலி னுக்கு பதிலாக திருப்பூர் நகர் தலைமையிடத்து துணை ஆணையர் பிரபாகரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT