தமிழகம்

ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்படி குணமடைந்து வீடு திரும்பும் கரோனா நோயாளிகளுக்கு பரிசோதனை எடுப்பதில்லை: மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் விளக்கம் 

செய்திப்பிரிவு

ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் படி குணமடைந்து வீடு திரும்பும் போது பரிசோதனை எடுக்கப்படுவதில்லை என்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் சங்குமணி தெரித்தார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தினமும் 3000 பேருக்கு கரானா பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.

தற்போது 2,000 பேருக்கு மட்டுமே கரானா பரிசோதனை செய்து வருகிறோம். இதில், தொற்று உறுதி செய்யாதவர்களுக்கும், அவர்களுடைய நோய் தொந்தரவுகளை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்கிறோம்.

அரசு மருத்துவமனையில் 8 மணி நேரத்தில் கரோனா முடிவினை கொடுத்து வருகிறோம்.

ஐசிஎம்ஆர் மற்றும் தமிழக அரசு வழிகாட்டுதல்படி கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்த பின்னர் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பும் போது பரிசோதனை எடுக்கப்படுவதில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT