தமிழகம்

கோதையாறு அணைகளிலிருந்து ராதாபுரத்துக்கு தண்ணீர் திறப்பு: தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்துக்கு, குமரி மாவட்டம் கோதையாறு பாசனத் திட்ட அணைகளில் இருந்து வரும் ஜூலை 15-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை 30 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தினமும் வினாடிக்கு 75 கன அடி வீதம் 194.40 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக் கப்படும். இதனால், ராதாபுரம் தாலுகா வில் 17 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT