கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணை நடத்திவிட்டு வெளியே வந்த குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன். 
தமிழகம்

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு: சிபிஐ விசாரணை இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இன்று (ஜூலை 10) தூத்துக்குடியில் விசாரணையை தொடங்குகின்றனர்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந் ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உயர் நீதிமன்றக் கிளை தாமாக முன்வந்து விசார ணை நடத்தி வருகிறது.

சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, சாத்தான் குளம் காவல் ஆய்வாளர் உட்பட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ முறைப்படி ஏற்றுக் கொண்டது.

விசாரணை அதிகாரியாக டெல்லி சிபிஐ சிறப்பு புலனாய்வுப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் வி.கே.சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது தலைமையிலான சிபிஐ விசாரணை குழுவினர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் 2 மணிக்கு தூத்துக்குடி வருகின்றனர். பின்னர் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முறைப்படி பெற்றுக் கொள்கின்றனர்.

23-ம் தேதி வரை காவல்

இதனிடையே, நேற்று முன்தி னம் கைதான சாத்தான்குளம் சிறப்பு எஸ்.ஐ. பால்துரை, காவ லர்கள் தாமஸ் பிரான்சிஸ், செல்லத்துரை, சாமத்துரை, வெயிலுமுத்து ஆகிய 5 பேரையும் வரும் 23-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மருத்துவப் பரிசோதனை முடிந் ததும் செல்லத்துரை, சாமத்துரை, வெயிலுமுத்து மூன்று பேர் மட்டும் நேற்று அதிகாலை மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிறப்பு எஸ்.ஐ. பால்துரை, காவலர் தாமஸ் பிரான்சிஸ் ஆகியோருக்கு நெஞ்சுவலி, அதிக ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர்.

இவ்வழக்கில் கைதாகியுள்ள சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் தர், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் ஆகியோர் ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி லோகேஸ்வரன் முன்னிலையில் நேற்று விசார ணைக்கு வந்தது.

மனு மீதான விசாரணையை வரும் 13-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

சிறையில் விசாரணை

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இவ்வழக்கை விசாரித்து வரும், கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் நேற்று கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணை நடத்தினார்.

SCROLL FOR NEXT