கோப்புப் படம் 
தமிழகம்

ரேடியோ காலர் கருவி பொருத்தி சத்தி வனப்பகுதியில் விடப்பட்ட யானை மர்மமாக உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனப்பகுதியில் வயல் நிலங்களை சேதப்படுத்தி விவசாயிகளை அச்சுறுத்தி வந்த 32 வயது ஆண் காட்டு யானையை ஜூன் மாதம் 12-ம் தேதி மயக்க மருந்து செலுத்தி பிடித்த வனத்துறையினர், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் விட்டனர். சத்தியமங்கலம் மற்றும் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியான மங்களப்பட்டி ஆகிய இடங்களில் சுற்றித்திரிந்த யானையை, ரேடியோ காலர் கருவி மூலம் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று சீகூர் வனப்பகுதிக்குட்பட்ட தட்டலட்டி பகுதியில் அந்த யானை மர்மமாக உயிரிழந்து கிடந்தது .

தகவலின்பேரில் முதுமலை துணை இயக்குநர் ஸ்ரீகாந்த், சரகர் முரளி ஆகியோர் சென்று பார்த்தபோது யானையின் தந்தங்கள் அப்படியே இருந்தன. யானையின் சடலம் கிடந்த இடம் சீகூரில் இருந்து வெகுதொலைவு என்பதால், இன்று உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்பிறகே யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் கூறினர்.

SCROLL FOR NEXT