தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவராக கோவை யுனைடெட் ஜமாத் பொதுச் செயலாளர் அப்துல் ஜப்பார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுபான்மையினர் நலத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஹஜ் குழு சட்டத்தின்படி, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு 12 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு, திருத்தி அமைக்கப்பட்டது. தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் முதல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுப்பணித் துறை கூட்ட அரங்கில் ஜூலை 7-ம் தேதி நடைபெற்றது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைச் செயலர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவராக கோவை யுனைடெட் ஜமாத் பொதுச் செயலாளர் ஏ.அப்துல் ஜப்பார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.