எழிச்சூர் கரோனா சிகிச்சை மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லைஎனக்கூறி சுகாதாரப் பணியாளர்களுடன் நோயாளிகள் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பெரும்புதூர் அருகே எழிச்சூரில் கட்டுமான தொழிலாளர்களுக்காக விடுதி உள்ளது. இந்தவிடுதியில் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் பணியில் இருந்த சுகாதாரப் பணியாளர்களுடன் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நோயாளிகளின் போராட்டத்துக்கு பிறகு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து அங்கு சிகிச்சை பெறுபவர்கள் சிலர் கூறியதாவது:
கரோனாவால் பாதிக்கப்பட்டுகாஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த எங்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு எழிச்சூர் மையத்துக்கு அழைத்து வந்தனர். இந்த மையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. கடந்த 5 நாட்களாக குப்பை அகற்றப்படவில்லை. கழிப்பறைகளை சுத்தப்படுத்தவில்லை. அறைகளின் தரைகளை நாங்களே பெருக்கி சுத்தம் செய்கிறோம். மருந்து, மாத்திரைகள் சரிவர கொடுக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.