மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளுக்கு கரோனா எதிர்ப்பு சக்தி சித்த மருந்து பொடி வழங்கப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன், 66 மூலிகைகள் அடங்கிய இம்ப்ரோ என்ற சித்த மருந்து பொடியைக் கண்டுபிடித்துள்ளார்.
இந்த பொடியில் கிருமிகளைக் கொல்லும் சக்தி இருப்பதாக தமிழக மருத்துவ வல்லுனர் குழு தெரிவித்துள்ளது. இம்ப்ரோ பொடியை ஆய்வு செய்ய மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றம் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகளுக்கு இம்ப்ரோ மருந்து பொடி வழங்கும் நிகழ்வு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
இதில் முதன்மை மாவட்ட நீதிபதி நஷீமாபானு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் நீதிபதி வி.தீபா மற்றும் மாவட்ட நீதிபதிகள், தாலுகா நீதிபதிகள் என 53 பேருக்கு இம்ப்ரோ மருந்துப் பொடியை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் வழங்கினார். வழக்கறிஞர் முத்துக்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.