தமிழகம்

சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 68 பேருக்கு கரோனா

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 68 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 30-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், போலீஸாருக்கு தொற்று பரவியதால் அதிர்ச்சியில் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கரோனாவால் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர். தற்போது 150-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று பகல் 12 மணி வரை காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, இளையான்குடி, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 87 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 68 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களை சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

காவல்துறை, ஊரகவளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் இன்று 55 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பினர்.

SCROLL FOR NEXT