ரூ.5.10 கோடிக்கு ஏலத்தில் விற்பனையான சத்குருவின் `பைரவா’ ஓவியம். 
தமிழகம்

ஓவியம் மூலம் கிடைத்த ரூ.9 கோடியை கிராம மக்களுக்கு வழங்கினார் சத்குரு

செய்திப்பிரிவு

ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு வரைந்த இரு ஓவியங்கள் மூலம் கிடைத்த ரூ.9 கோடி நிதி, கிராம மக்களின் பசியைப் போக்க வழங்கப்பட்டதாக ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.

ஈஷாவின் சமூக நலப் பிரிவான ‘ஈஷா அவுட்ரீச்’ அமைப்பு கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கரோனா நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில், தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவும், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு உதவிகளும் செய்யப்படுகின்றன.

இதற்கு நிதி திரட்டும் வகையில், யோகா மைய நிறுவனர் சத்குரு 2 ஓவியங்களை வரைந்தார். அவரது முதல் ஓவியம் ரூ.4.14 கோடிக்கு ஏலம்போனது. தொடர்ந்து, அவர் வரைந்த ‘பைரவா’ ஓவியம் ஆன்லைன் மூலம் ரூ.5.1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த இரு ஓவியங்கள் மூலம் கிடைத்த ரூ.9.2 கோடி நிதி, ஈஷா அவுட்ரீச் நிவாரணப் பணிகளுக்கு வழங்கப்பட்டது.

தனது இரண்டாவது ஓவியத்தை, நாட்டு மாட்டு சாணம், கரி, மஞ்சள், சுண்ணாம்பு ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி சத்குரு வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT