நெய்வேலி என்எல்சி 2-வது அனல்மின் நிலையத்தில் கடந்த 1-ம் தேதி கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டதில் அந்த இடத்தி லேயே 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந் தனர்.
சென்னை தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த அவர்களில், 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளி ஆனந்த பத்பநாபன்(50) என்பவர் நேற்று உயிரிழந்தார். இவரையும் சேர்த்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.