திருச்சி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த திருச்சி செம்பட்டு பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி, காஜா நகரைச் சேர்ந்த 52 வயதான நபர் ஆகிய இருவர் நேற்று உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் 61 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணியாற்றி வந்த 36 வயதான செவிலியர், ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் மாத்திரை வழங்கும் பணியில் இருந்த பெண் ஊழியர் உட்பட 34 பேருக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 43 பேருக்கும், கரூர் மாவட்டத்தில் 8 வயது சிறுமி உட்பட 3 பேருக்கும் நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருச்சியில் சிகிச்சை பெற்று குணமடைந்த 77 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என்.புரத்தை சேர்ந்த 50 வயதுடையவர் நேற்று உயிரிழந்தார். கடலூர் மாவட்டத்தில் 64 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 28 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் ஒருவருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்று புதிதாக 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.