தமிழகம்

உடல்நலம் பாதிக்கப்பட்ட 50 வயதைக் கடந்த போலீஸாருக்கு விடுப்பு

செய்திப்பிரிவு

50 வயதை கடந்த போலீஸாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனே விடுமுறை அளிக்கஉத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 104 நாட்களில் ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித் திரிந்தவர்களின் மீது 7 லட்சத்து 46 ஆயிரத்து 436 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6 லட்சத்து 23 ஆயிரத்து 88 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 17 கோடியே 30 லட்சத்து 53 ஆயிரத்து 286 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகம் முழுவதும் போலீஸ் குடியிருப்புகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. 50 வயதைக் கடந்த போலீஸாருக்கு உடல்நலக் குறைவுஏற்பட்டால் அவர்களுக்கு விடுமுறை அளிக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT