அடையாறு புற்றுநோய் மருத்துவ மனை நடத்தும் உளவியல் புற்று நோயியல் படிப்பு மாணவர் சேர்க் கைக்கான விண்ணப்ப விநியோகம் சனிக்கிழமை தொடங்கியது. விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் ஜூன் 16-ம் தேதியாகும்.
சென்னை பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற இந்த படிப்பு ஓராண்டு கொண்டதாகும். இதில் செய்முறைப் பயிற்சி மற்றும் தொழில்பயிற்சி வழங்கப்படும். பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் உளவியலில் எம்.ஏ. அல்லது எம்.எஸ்சி., பட்டம் பெற்ற வர்கள் இதற்கு விண்ணப்பிக்க லாம். எஸ்சி, எஸ்டி மாணவர் கள் 50 சதவீதமும் மற்றவர்கள் 55 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டத்துக்கு படிக்கி ரும்புவோரும் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு, ‘உளவியல் புற்று நோயியல் துறை, அடையாறு புற்று நோய் மருத்துவமனை, சர்தார் படேல் சாலை, அடையாறு, சென்னை-36’ என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலை பேசி எண்கள் 044 - 2235 1615, 2235 0131 (Extn-189). இ-மெயில் ci.psycho.oncology@gmail.com
விண்ணப்பங்களை www.cancerinstitutewia.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.