விருதுநகர் மாவட்டம் ராஜபா ளையம் அருகே சேத்தூரில் ஊரக காவல் ஏட்டாக பணியாற்றியவர் அய்யனார். கரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகி ச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், சேத்தூர் காவல் நிலையத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், டிஐஜி ராஜேந்திரன், காவல் கண் காணிப்பாளர் பெருமாள் ஆகியோர் ஏட்டு அய்யனாரின் உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் ராஜபாளையம் டிஎஸ்பி நாகசங்கர் உட்பட காவல்துறையினர் பங்கேற்றனர்.
இதனிடையே, சிவகாசி திருத்தங்கல்லில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மருத் துவர் ஒருவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.