பி.தங்கமணி 
தமிழகம்

திமுகவில் இருப்பை காட்டிக்கொள்ள அரசு மீது குற்றம் சுமத்துவதா? செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் பி.தங்கமணி கண்டனம்

செய்திப்பிரிவு

திமுகவில் தன் இருப்பைக் காட்டிக் கொள்ள செந்தில் பாலாஜி தமிழக அரசு மீது குற்றம் சுமத்தி அறிக்கை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் பி.தங்கமணி பதிலளித்துள்ளார்

தமிழகத்தில் மின் கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை நடப்பதாக திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்து அமைச்சர் பி.தங்கமணி அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனாவிலிருந்து மக்களைக் காக்க இரவு, பகல் பாராது ஒட்டுமொத்த அரசும் உழைத்து வரும் வேளையில், தன் அரசியல் இருப்பைக் காட்ட திமுக தலைவர் ஸ்டாலின், மின்சாரத்தின் பெயரில் அறிக்கை வெளியிடத் திட்டமிட்டு அதை செந்தில் பாலாஜி பெயரில் வெளியிட்டிருக்கிறார். இந்த அறிக்கை உண்மைக்கு மாறானது.

ஊரடங்கு காலத்தில் மின் அளவைக் கணக்கெடுப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு முதல் மாத மின் உபயோக அளவையே அடுத் தடுத்த மாதங்களுக்குக் கணக் கிட்டு கட்டணம் வசூலிக்கப் படுகிறது. இதைக் கூடுதலாக வசூலிக்கிறார்கள் என்று அரசு மீது பழிசுமத்த திமுக விஷமப் பிரச்சாரம் செய்கிறது.

வீட்டை விட்டு வெளியே வராத திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பாடி, தான் திமுகவி ல்தான் இருக்கிறேன் என்று வெளிக்காட்டும் விதமாக செந்தில் பாலாஜி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்று தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT