திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மாநகராட்சி ஊழியர்கள் 150 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மாநகராட்சி சுகாதாரத் துறையி னர் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சியில் 2-ம் மண்டல உதவி ஆணையராக செல்வநாயகம் (51) உள்ளார். இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் செல்வநாயகம் பங்கேற்றிருந்தார். இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்றவர்கள், மாநகராட்சி ஊழி யர்கள் என 150 பேருக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதேபோல மாநகராட்சி அலுவலகம் அருகே இயங்கும் பல்பொருள் அங்காடியில் பணியாற்றும் பெருமாநல்லூர் சாலை மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.