‘வாட்ஸ்அப் வீடியோ கால்’ மூலம் பொதுமக்கள் 2-வது நாளாக காவல் ஆணையரிடம் நேற்று புகார் தெரிவித்தனர்.
சென்னையில் கரோனா வைரஸ்பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் காவல் ஆணையரை நேரில் சந்தித்து தங்கள் குறைகளைத் தெரிவிக்க முடியாத நிலை உள்ளது.
இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12 முதல் 1 வரை 6369 100 100 என்ற ‘வாட்ஸ்அப்’ எண்ணில் ‘வீடியோ கால்’ மூலம் காவல் ஆணையரிடம் புகார் தெரிவிக்கலாம் என்ற புதிய திட்டத்தை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
முதல் நாளில் 34 பேர் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று இரண்டாவது நாளாக காவல் ஆணையரை ‘வாட்ஸ்அப் வீடியோ கால்’ மூலம் தொடர்பு கொண்டு 20-க்கும் மேற்பட்டோர் தங்களது புகார்களைத் தெரிவித்தனர்.
இந்த புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஆணையர் மகேஷ்குமார்அகர்வால், காவல் அதிகாரி களுக்கு உத்தரவிட்டுள்ளார்.