தமிழகம்

புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் சந்திரமோகன் மறைவு

செய்திப்பிரிவு

புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் எஸ்.எம்.சந்திரமோகன் மாரடைப்பால் காலமானார்.

சென்னை அரசு பொது மருத்துவமனை இரைப்பை குடலியல் அறுவை சிகிச்சை மையத்தின் இயக்குநராக இருந்து ஓய்வுபெற்றவர் மருத்துவர் எஸ்.எம்.சந்திரமோகன். மருத்துவ சேவையுடன் சேர்த்து‘நலமான வாழ்வுக்கு மக்களின் பங்கு’,‘நோயை வெல்லும் உணவு’, ‘புற்றுநோய் வெல்ல முடியாதது அல்ல’போன்ற தலைப்புகளில் கட்டுரைப் போட்டிகளை நடத்தி பரிசுகளைவழங்கி வந்தார். ஓய்வுக்கு பிறகு ‘ஈசோ இந்தியா’ என்ற அமைப்பைதொடங்கி புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.இந்நிலையில், நேற்று காலை இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகனின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. நோயாளிகளின் மீது தனி அக்கறை செலுத்தியவர். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT