டீன் சங்குமணி 
தமிழகம்

கரோனா பணிக்கு வாக் இன் இன்டர்வியூவ் மூலம் மருத்துவர்கள் நியமனம்: அரசு மருத்துவக் கல்லூரி டீன்களுக்கு அதிகாரம் 

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

'வாக் இன் இன்டர்வியூவ்' மூலம் மருத்துவர்களை நியமித்துக் கொள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ‘டீன்’களுக்கு தமிழக அரசு அதிகாரம் வழங்கியுள்ளது.

தமிழகத்தில் ‘கரோனா’ தொற்று வேகமாகப் பரவும் நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான படுக்கை வசதி மட்டுமில்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் போதியளவில் இல்லை.

கல்லூரிகள், பள்ளிகள் உள்பட மருத்துவமனைக்கு வெளியே ‘கரோனா’ சிகிச்சை மையங்களை அமைத்து படுக்கை வசதிகளை அதிகரித்தாலும், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் இல்லாமல் சிகிச்சையில் தோய்வும், முன்பிருந்த கவனிப்பும் குறைவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதனால், தற்போது தமிழக அரசு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் அந்தந்த அரசு மருத்துவமனை டீன்களே, தேவைப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்புனர்கள், மருந்தாளுநர்கள் உள்பட மற்ற மருத்துவப் பணியாளர்களை ‘வாக் இன் இன்டர்வியூவ்’ (walk in interview) மூலம் எடுத்துக்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அந்த அடிப்படையில் இன்று ‘டீன்’ சங்குமணி 27 மருத்துவர்களை ரூ.60 ஆயிரம் மாத ஊதியம் அடிப்படையில் நியமித்து அரவ்களுக்கு பணி ஆணை வழங்கினார்.

இதுகுறித்து ‘டீன்’ சங்குமணியிடம் கேட்டபோது, ‘‘மருத்துவர்களை மட்டும் தற்போது எடுத்துள்ளோம். செவிலியர்கள், மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்புனர்கள் உள்ளிட்ட மற்ற பணியாளர்களையும் எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இவர்கள் ‘கரோனா’ தொற்று தடுப்பு பணிகள் நடக்கும் வரை மட்டுமே தற்போது இப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். அதன்பிறகு இவர்கள் பணியை அரசு முடிவு செய்யும், ’’ என்றார்.

SCROLL FOR NEXT