கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள செய்யூர் அனல் மின்நிலைய திட்டம் என்ன ஆனது? என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: ராமநா தபுரம் மாவட்டம் கடலா டியில் ரூ.24 ஆயிரம் கோடியில் 4,000 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
4,000 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க 4,000 ஏக்கர் வரை நிலமும், ஆண்டுக்கு 150 லட்சம் டன் நிலக்கரியும் தேவை. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் யூனிட் ரூ. 7-க்கு அதிகமாக இருக்கும். தமிழக மின்வாரியம் ஏற்கெனவே கடனில் இருக்கும் நிலையில் அதிக செலவாகும் இத்திட்டம் தேவைதானா? என்பதை முதல்வர் சிந்திக்க வேண்டும்.
2009 திமுக ஆட்சியில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட செய்யூர் அனல் மின் நிலையத் திட்டம் கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.2013-ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற்றதை தவிர வேறு எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. இத்திட்டம் என்ன ஆனது? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். ஏற்கெனவே அறிவிக் கப்பட்டவை கிடப்பில் இருக்கும் போது புதிய திட்டங்களை அறிவிப்பது சரியானது அல்ல என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.