தமிழகம்

தூத்துக்குடியில் விசைப்படகு சங்கத் தலைவர் கொலை

செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளர் சங்கத் தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி பூபால்ராயர்புரத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (45). தூத்துக்குடி விசைப்படகு தொழிலாளர் சங்க தலை வரான இவர், நேற்று மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலையில் கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது, ஒரு கும்பல் இவரை அரிவாளால் வெட்டியது. தடுக்க முயன்ற சசிகுமார் என்பவருக்கும் வெட்டு விழுந்தது. பார்த்தீபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சசிகுமார், தனியார் மருத்துவமனை யில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பார்த்திபன் கொலையை கண்டித்தும், கொலையாளிகளை உடனே கைது செய்யக் கோரியும் தூத்துக்குடி ஜார்ஜ் சாலையில் அவரது உறவினர்கள் மற்றும் விசைப்படகு மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட் னீஸ், போராட் டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கொலையாளி களைகைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக எஸ்.பி. தெரிவித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக நுழைவு வாயில்களை பூட்டி சீல் வைத்தனர்.

தூத்துக்குடி துறைமுகத்தில் மீன் ஏலம் விடுவதில் விசைப்படகு உரிமை யாளர்களுக்கும், தொழிலாளர்களுக் கும் பிரச்சினை இருந்து வந்ததுதான் இக் கொலைக்கு காரணம் என சொல்லப் படுகிறது. இதுதொடர்பாக சிலரிடம் போலீ ஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT