தமிழகம்

முழு ஊரடங்கு நாட்களில் ரயில் முன்பதிவு மையம் செயல்படாது

செய்திப்பிரிவு

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், ஈரோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் உள்ள 12 பயணிகள் முன்பதிவு மையங்கள் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாது.

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சேலம் ஜங்ஷன், டவுன் ரயில் நிலையங்கள், ஈரோடு, உதகமண்டலம், குன்னூர், மேட்டுப்பாளையம், கோவை ஜங்ஷன், கோவை வடக்கு, போத்தனூர், திருப்பூர், கரூர், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் உள்ள பயணிகள் முன்பதிவு மையங்கள் ஜூலை 12, 19 மற்றும் 26-ம் தேதிகளில் செயல்படாது என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளளது.

SCROLL FOR NEXT