செய்யூர் அடுத்த நைனார் குப்பம் பகுதியில் இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்குதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று சரணடைந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த நைனார் குப்பம் பகுதியில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
அப்பெண் தற்கொலைக்கு அதே பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன், தேவேந்திரன்ஆகிய 2 பேர் தூண்டுதலாக இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, செய்யூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், மேற்கண்ட சம்பவம் தொடர்பாக புருஷோத்தமன் என்பவர் மதுராந்தகம் டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று சரணடைந்தார்.