ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,500-ஐ கடந்துள்ளது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் வேலூர் மாவட்டம் முன்னிலைவகிப்பதால் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் நேற்றுஒரேநாளில் 118 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,971 ஆக உயர்ந்தது. இதுவரை இங்கு 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 61 பேருக்குபெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,201 ஆக உயர்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 48 பேருக்குதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே இங்கு பாதிப்பு எண்ணிக்கை 349 ஆக உயர்ந்துள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3,521 ஆக அதிகரித்துள்ளது.
2 டிஎஸ்பி உட்பட 40 பேர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2,354 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று வெளியிடப்பட்டுள்ள பட்டியலில், மேலும் 142 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவேபாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,496 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 2 டிஎஸ்பிக்கள் உட்பட காவல் துறையில் பணியாற்றும் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இங்கு 1,107 பேர் குணமடைந்துள்ளனர்.